தெற்கு காஷ்மீரின் இமயமலையில் உள்ள புகழ்வாய்ந்த, இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக இன்று காலை மேலும் 1,180 பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டனர்.
பலத்தப் பாதுகாப்புடன், பகவதி நகர் முகாமில் இருந்து 34 வாகனங்களில் சென்ற குழுவில் 743 ஆண்கள், 265 பெண்கள், 30 குழந்தைகள், 192 சாதுக்கள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரில் பலத்த மழை பெய்தாலும் இன்றைய பயணத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாது. நிலச்சரிவு போன்ற தகவல்கள் எதுவும் இல்லை.
இயற்கையாக உருவாகும் இந்த பனிலிங்கத்தை தரிசிக்க கடந்த ஜுன் மாதம் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த பயணம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் புனிதப்பயணம் செல்வது நான்கு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.