Newsworld News National 0807 18 1080718125_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குதிரை பேரத்தில் காங்கிரஸ் ஈடுபடவில்லை: பிரணாப்!

Advertiesment
ஐ.மு.கூட்டணி பிரணாப் முகர்ஜி அயலுறவு அமைச்சர் காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு
, வெள்ளி, 18 ஜூலை 2008 (18:56 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் குதிரைபேர அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது என்று குற்றச்சாற்றை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துள்ளார்.

சண்டிகரில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களைவையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் எந்தவித சிக்கலும் இன்றி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை ஊடகங்கள் ஆதரமில்லாத செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து அமைதி காக்க வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அப்போது வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், மக்களவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற ஐ.மு.கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விரிவாக கூற மறுத்த அவர், அனைத்தும் ஜனநாயக முறைப்படி நடந்து வருவதாக ஒற்றை வரியில் குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil