Publish Date: Fri, 18 Jul 2008 (17:15 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பினருக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹரியானாவில் சிர்சா மாவட்டம் தப்வாலி நகரத்தில் தேரா சச்சா சவுதா அமைப்பினர் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தின் போது இருதரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாக காவல்துறை ஆணையர் வி.உமாசங்கர் தெரிவித்தார்.
கல்வீச்சு மற்றும் கலவரத்தில் சீக்கியர் ஒருவர் நிலைதடுமாறி விழுந்து பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுவாக தேரா அமைப்பினர் நடத்தும் கூட்டங்கள் தொடர்பாக முன்கூட்டித் தகவல் தரப்படும் என்றும், இம்முறை தகவல் எதுவும் இல்லாததால் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை என்றும் உமாசங்கர் தெரிவித்தார்.