மனித உறுப்பு மாற்று சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குறித்துப் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மனித உறுப்பு மாற்று சட்டம் 1994-ல் சில திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. என்னென்ன திருத்தங்கள் செய்யப்படும் என்பது குறித்த விளக்கம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தேச திருத்தங்கள் பற்றி பொது மக்கள் தங்கள் கருத்துகள், ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். துணை செயலர் (எம்எஸ்), மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அறை எண் 208, 'டி' விங், நிர்மாண் பவன், புது டெல்லி-110 018 என்ற முகவரிக்கு அஞ்சலில் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை அனுப்பலாம் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.