கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சி எம்.பி. பப்பு யாதவிற்கு நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 1998, ஜூன் 14 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. அஜித் சர்க்கார் கொல்லப்பட்ட வழக்கில் ராஜேஷ் ராஜன் என்ற பப்பு யாதவ் எம்.பி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2005 முதல் சிறையில் உள்ள பப்பு யாதவிற்கு, குடியரசுத் தலைவர் தேர்தலிலும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்களிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பப்பு யாதவ் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி ஜி.எஸ்.கிஸ்டானி, பப்பு யாதவிற்குத் தேவையான பாதுகாப்புகளை செய்து தருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர் லாலு பிரசாத்தின் உறவினரான பப்பு யாதவ், பீகார் மாநிலம் மாதெப்புரா தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.