சிறுபான்மையினர் நலனிற்காக பிரதமர் மன்மோகன் சிங் அரசு அறிமுகப்படுத்திய 15 அம்சத் திட்டத்தை மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை செய்தது.
இத்திட்டத்தின் அம்சங்கள் குறித்தும், அதைச் செயல்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே அமைச்சரவைக்கு விளக்கினார் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
நலத்திட்டத்தின் வெற்றிகள் பட்டியலிடப்பட்ட 5 பக்க அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.