நமது நாட்டில் ஒருவழிப் பாதையாக உள்ள 5,000 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளை இருவழிப் பாதையாக மேம்படுத்துவதற்கு ரூ.6,950 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்தை உறுதிசெய்ய முடியும் என்றும், சுற்றுலா முக்கியத்துவம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளுக்கு இடையிலான இணைப்பு வலுப்படும் என்றும் அவர் கூறினார்.