அரசுப் பேருந்துகளை மின்சாரத்தில் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கேரளப் போக்குவரத்து அமைச்சர் மேத்யூ டி தாமஸ் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
பேருந்துகளை மின்மயமாக்குவது தொடர்பாக ரூ.1,280 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு 8 ஆவது நிதிக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு பேருந்துகளை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி இயக்கும் திட்டமும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மேத்யூ கூறியுள்ளார்.
பேருந்துகளில் இயற்கை எரிவாயு பயன்படுத்தும் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால், மாநில அரசிற்கு ஆகும் எரிபொருள் செலவு ரூ.430 கோடியில் இருந்து ரூ.172 கோடியாகக் குறையும். அதாவது 60 விழுக்காடு வரை குறையும் என்றார் அவர்.