நாடாளுமன்றத்தில் வரும் 21-22 தேதிகளில் நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க சிரோன்மணி அகாலி தளம் கட்சி முடிவு செய்துள்ளது.
"அமெரிக்கா உடனான அணு சக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு எங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை. மேலும் அதுபற்றி எந்த மட்டத்திலும் பஞ்சாப் மாநில அரசுடன் விவாதிக்கவில்லை" என்று அக்கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் சண்டிகரில் தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் அகாலி தளம் கட்சி ஒருங்கிணைந்து செயல்படும் என்றும், இது தொடர்பாக தங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித கட்டளையும் பிறப்பிக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
சிரோன்மணி அகாலி தளத்திற்கு மக்களவையில் 8 உறுப்பினர்கள் உள்ளனர்.