Publish Date: Tue, 15 Jul 2008 (18:20 IST)
Updated Date: Tue, 15 Jul 2008 (18:20 IST)
பிரதமர் மன்மோகன் சிங்கும் ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியும் கார்பரேட் விடயங்களோ அல்லது அரசியலோ பற்றிப் பேசவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
"நவீன பொருளாதார உலகத்தின் தலைவர் என்ற முறையில் தேசியப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து கார்பரேட் தலைவர்களிடம் எல்லா நேரமும் பிரதமர் விவாதித்துக்கொண்டு இருக்கிறார். கார்பரேட் துறை விவகாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதை இந்திய மக்கள் நன்கு அறிவார்கள்" என்று பிரதமரின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.