ஜம்மு தெற்கு காஷ்மீரின் இமயமலையில் உள்ள புகழ்வாய்ந்த இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக இன்று காலை மேலும் 1,033 பக்தர்கள் புறப்பட்டனர்.
பகவதி நகர் முகாமில் இருந்து இன்று காலை 36 வாகனங்களில் புறப்பட்ட இந்த பக்தர்கள் குழுவில் 209 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட 1,033 பேர் அமர்நாத் சென்றனர்.
இயற்கையாக உருவாகும் இந்த பனிலிங்கத்தை தரிசிக்க கடந்த ஜுன் மாதம் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த பயணம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை 51,440 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் புனிதப்பயணம் செல்வது நான்கு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.