கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பையனூர் அருகில் வேலூர் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் பெங்களூர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) பணியாற்றும் விஞ்ஞானி பி.எம்.அரவிந்தாக்ஷன் பலியானார்.
அரவிந்தாக்ஷன் தனது குடும்பத்தினருடன் சென்ற ஆட்டோ தனியார் பேருந்து ஒன்றின் மீது மோதியது.
இந்த விபத்தில் அவரின் மனைவி பீனா படுகாயமடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகன் அர்ஜூன் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி தப்பித்தார்.