Publish Date: Mon, 14 Jul 2008 (12:53 IST)
Updated Date: Mon, 14 Jul 2008 (12:53 IST)
ஐம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் வீட்டின் மீது தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
சட்ரூ பகுதியில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ராகேஷ் குமார் என்பவரது வீட்டின் மீது தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது பொருளிழப்போ எதுவும் ஏற்படவில்லை என்றும் வீட்டின் ஜன்னல் மீது வந்து விழுந்த வெடி குண்டு சாலையில் விழுந்து வெடித்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
Webdunia
Publish Date: Mon, 14 Jul 2008 (12:53 IST)
Updated Date: Mon, 14 Jul 2008 (12:53 IST)