இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) ஆகிய இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களை பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஹரியானாவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சோனேபாட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜின்ஞ்ஜாலி என்ற கிராமத்தில் புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நடந்த இச்சந்திப்பு 3 மணி நேரம் நீடித்ததாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.சுதர்சன், வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா மற்றும் இந்த இரு அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 15 பேர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். அவர்களிடம் தற்போதைய அரசியல் நிலை குறித்து அத்வானி விவாதித்துள்ளார்.
இந்தச் சந்திப்புப் பற்றி ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. அமைப்புகளின் தலைவர்கள் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.