Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆருஷி கொலை: ராஜேஷ் தல்வாருக்கு எதிராக ஆதாரமில்லை - சி.பி.ஐ.

ஆருஷி கொலை: ராஜேஷ் தல்வாருக்கு எதிராக ஆதாரமில்லை - சி.பி.ஐ.
, வெள்ளி, 11 ஜூலை 2008 (16:41 IST)
டெல்லியை அடுத்த நொய்டாவில் 14 வயது மாணவி ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜூம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள ஆருஷியின் தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வாருக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லை என்று மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தெரிவித்துள்ளது.

ராஜேஷ் தல்வாரின் ஜாமீன் மனுவை பரிசீலித்து அவருக்கு ஜாமீன் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காஸியாபாத் நீதிமன்றத்தில் தாங்கள் தெரிவித்து விட்டதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் 16ஆம் தேதியன்றும் ஆருஷி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ், வீட்டின் மேல்தளத்தில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த வழக்கில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி நொய்டா காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ராஜேஷ் தல்வாரிடம் கம்பவுண்டராக வேலை செய்த கிருஷ்ணா, டாக்டர் அனிதா துரானியின் வீட்டு வேலைக்காரர் ராஜ்குமார் ஆகியோரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

ராஜேஷ் தல்வாருடன் இணைந்து பல் மருத்துவமனையை நடத்திய டாக்டர் அனிதா துரானிக்கும், ராஜேஷ் தல்வாருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், அது ஆருஷிக்குத் தெரிய வந்ததால், அவளை ராஜேஷ் தல்வார் கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இநத வழக்கு பின்னர் மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது. என்றாலும் ராஜேஷ் தல்வார்தான் இந்த இரட்டைக் கொலையை செய்தார் என்பதற்கு ம.பு.க அதிகாரிகளால் உறுதியான ஆதாரங்களை திரட்டமுடியவில்லை.

இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ராஜேஷ் தல்வார் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை தோண்டத் தோண்ட புதையல் போல போய்க்கொண்டே இருந்தது.

அனிதா துரானியின் வீட்டில் வேலைபார்த்து வந்த ராஜ்குமாருக்கு, ஆருஷியின் வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜேஷ் தல்வார் மீது அதிருப்தி கொண்டிருந்த அவரது உதவியாளர் கிருஷ்ணா, ஆருஷியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

கொலை நடந்த தினத்தன்று ஆருஷியின் வீட்டுக்கு வெளியே உள்ள வேலைக்காரர்கள் தங்கும் விடுதியில் கிருஷ்ணா, ராஜ்குமார், சாம்பு என்ற ஒருவர் ஆகியோர் பீர் அருந்தியதாகவும், ராஜ்குமார் ஆருஷியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் போதை மருந்து செலுத்தி உண்மை கண்டறியும் சோதனையின் போது ராஜ்குமார் தெரிவித்தார்.

தனது முயற்சிக்கு ஆருஷி எதிர்ப்பு தெரிவிக்கவே ஆருஷியைக் கொலை செய்ததாகவும், இந்த சம்பவத்தை வெளியே கூறுவேன் என்று ஹேமராஜ் கூறியதால், தானும், கிருஷ்ணாவும் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாகவும் ராஜ்குமார் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil