Publish Date: Fri, 11 Jul 2008 (11:26 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:41 IST)
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசித்து வணங்க இன்று மேலும் 1,070 பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 126 சாதுக்கள், 249 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் உள்பட இந்த 1,070 யாத்ரிகர்களும் 33 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கிப் புறப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.