நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குப் பெறுவோம் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கான தேதி நாளை மாலை முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியைக் கவிழாமல் காப்பதற்குத் தேவையான ஆதரவு தனது அரசிற்கு இருப்பதாகப் பிரதமர் நம்புவதாகவும், பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்கள் கூட்டத்திற்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்துவிட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக குடியரசுத் தலைவருடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்துள்ளது.