அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில், மக்களவையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக சிரோமணி அகாலி தளம் கூறியுள்ளது.
அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கப் போவதில்லை என்று அகாலி தளக் கட்சியின் எம்.பி.க்கள் சிலர் கூறுவருவது பற்றி, அக்கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலிடம் கேட்டதற்கு,"எங்கள் நிலை தெள்ளத் தெளிவானது. நாங்கள் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் செல்லப் போகிறோம்" என்றார்.
இருந்தாலும், சண்டிகரில் ஜூலை 15 ஆம் தேதி நடக்கவுள்ள கட்சியின் மையக்குழுக் கூட்டத்தில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.