மக்களவைத் தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று கருத்துத் தெரிவித்துள்ள மக்களவைத் தலைவர் அலுவலகம். "ஆதாரமற்ற செய்திகளையும் கணிப்புகளையும் எழுதுவதன் மூலம் நமது நாட்டின் அதிகபட்ச மதிப்புபுடைய மக்களவைத் தலைவர் பதவியை சர்ச்சையில் இழுக்க வேண்டாம்" என்று ஊடககங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
"மக்களவைத் தலைவர் தனது பதவிக்குரிய பணிகளை மேற்கொள்ளும்போது எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து நடந்துகொள்ள முடியாது.
சோம்நாத் சாட்டர்ஜி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர். அவரது பெயரை எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு மனதாக முன்மொழிந்துள்ளன. அவர் எந்தக் கட்சியின் சார்பிலும் தேர்வு செய்யப்படவில்லை" என்று மக்களவைத் தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.
முன்னதாக, பதவி விலகுவது பற்றிய முடிவு சோம்நாத் சாட்டர்ஜியின் கைகளில் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியிருந்தார்.