ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் என்ற இடத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறு என்று மத்திய அரசு கூறியுள்ளது.
"ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் இந்தியத் தூதரகத்தின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளியான தகவல்களில் சிறிதும் உண்மையில்லை" என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரத்தில் இதுவும் ஒன்று என்று அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
முன்னதாக இன்று காலை பாகிஸ்தான் பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்திகள், ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் இந்தியத் தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்களில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறின.