Publish Date: Wed, 09 Jul 2008 (18:22 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (18:22 IST)
புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசித்து வணங்க இன்று மேலும் 870 பக்தர்கள் பாதுகாப்புடன் புறப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 208 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் உள்பட இந்த 870 யாத்ரிகர்களும் பல வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அமர்நாத் நோக்கிப் புறப்பட்டனர்.
21 ஆவது குழுவாகப் புறப்பட்டுச் சென்றுள்ள இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 45,513 யாத்ரிகர்கள் பகவதி நகர் முகாமில் இருந்து புனித அமர்நாத் சென்றுள்ளனர்.
ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
கடந்த மாதம் 17 ஆம் தேதி யாத்திரை துவங்கியது முதல் இதுவரை சுமார் 4.5 லட்சம் பக்தர்கள் அமர்நாத்தில் வழிபாடு செய்துள்ளனர்.
Webdunia
Publish Date: Wed, 09 Jul 2008 (18:22 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (18:22 IST)