Publish Date: Tue, 08 Jul 2008 (16:43 IST)
Updated Date: Tue, 08 Jul 2008 (16:43 IST)
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை விளக்கியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஐ.மு.கூ. அரசைக் கண்டித்தும் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளனர்.
"இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் தோல்வியைக் கண்டித்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பீமன் போஸ் கொல்கத்தாவில் தெரிவித்தார்.
இதன் ஒருபகுதியாக 14 ஆம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்றும், 15 ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் துவங்கும் என்றும் பீமன் போஸ் கூறினார்.