Publish Date: Sun, 06 Jul 2008 (13:27 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)
அணுசக்தி ஒப்பந்தத்தில் அரசு உரிய நேரத்தில் கையெழுத்திடும் என்று மத்திய அமைச்சர் தாஸ் முன்சி கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் ராஜ்கஞ்சில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உரிய நேரத்தில் கையெழுத்து போடும். இதில் எந்த தயக்கமும் இல்லை. இது விஷயத்தில் நாங்கள் எதையும் சந்திக்க தயார்.
மத்திய அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று சில தகவல் தொடர்பு சாதனங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. நாடாளுமன்றத்துக்கு உரிய காலத்தில்தான் தேர்தல் நடைபெறும்.
காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்யும் என்று தாஸ் முன்சி கூறினார்.
Webdunia
Publish Date: Sun, 06 Jul 2008 (13:27 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)