Publish Date: Sun, 06 Jul 2008 (12:09 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாகல்காம் அமர்நாத் குகைப் பாதையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது என்றும், இதனால் யாத்ரீகர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக யாத்திரை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுண்வான் முகாமிலிருந்து இன்று புறப்படவிருந்த சுமார் 2,000 யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மழை நின்ற பின் மீண்டும் யாத்திரை தொடங்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Webdunia
Publish Date: Sun, 06 Jul 2008 (12:09 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)