Publish Date: Sat, 05 Jul 2008 (17:01 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக தாங்கள் எழுதியுள்ள கடிதத்திற்கு மத்திய அரசின் பதிலிற்காகக் காத்திருக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசுவின் வீட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், சீதாராம் யச்சூரி, பீமன் பாசு, மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோர் விவாதித்தனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிக் கேட்டதற்கு, "அணு சக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதா என்பது பற்றி ஜூலை 7 க்குள் பதிலளிக்கும்படி அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்திற்கான பதிலிற்காக காத்திருக்கிறோம்" என்றார் பிரகாஷ் காரத்.
Webdunia
Publish Date: Sat, 05 Jul 2008 (17:01 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)