இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
அன்பிற்குரிய பிரணாப் முகர்ஜி, அணு சக்தி விவகாரம் மீதான ஐ.மு.கூ.- இடதுசாரி குழு ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு, அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அரசு முன்னோக்கிச் செல்வது தொடர்பாக சில மத்திய அமைச்சர்களும், ஆளும் கூட்டணியில் உள்ள சில தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்திற்கு பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்.
இதற்கான பதிலை ஜூலை 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் காரத் (சி.பி.ஐ.- எம்), ஏ.பி.பரதன் (சி.பி.ஐ.), தேபபிரதா பிஸ்வாஸ் (ஃபார்வார்ட் பிளாக்), டி.ஜெ.சந்திரசூதன் (ஆர்.எஸ்.பி.) ஆகியோர் கையெழுத்திட்டுள்னர்.