இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவளித்திருப்பதை முன்னிட்டு, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட சக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று காலை ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இடதுசாரிகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.தே.மு.கூ. நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், பிரதமரைச் சந்தித்துள்ள சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங், பொதுச் செயலர் அமர்சிங் ஆகியோர் சோனியா காந்தியைச் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.