மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில், சாலைப் போக்குவரத்து தடைபட்டதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வடக்கு மும்பையில் உள்ள கொலாபா என்ற இடத்தில் அதிகபட்சமாக 200 மி.மீ மழையும், புறநகர்ப் பகுதியில் சாண்டாகுரூஸ் என்ற இடத்தில் 142.9 மி.மீ மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பந்த்ரா, சியான், செம்பூர், கட்கோபூர், அந்த்தேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மும்பை- புனே விரைவுச் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பையில் இருந்து பயணிக்கும் ரயில்கள் அனைத்தும் 10 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாகப் புறப்பட்டன.