Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெற்கு ரயில்வே 11 புதிய ரயில்களை அறிமுகம் செய்கிறது!

தெற்கு ரயில்வே 11 புதிய ரயில்களை அறிமுகம் செய்கிறது!
, செவ்வாய், 1 ஜூலை 2008 (13:24 IST)
அடுத்த மாதம் தெற்கு ரயில்வே 11 புதிய ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்துள்ளார்.

புதிய ரயில்கள் தவிர, 6 ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், 5 ரயில்களின் சேவையை விரிவு படுத்தவும், திருவனந்தபுரம்-புது டெல்லி ராஜதானி விரைவு ரயில் எண்ணிக்கையை கூட்டவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நேற்று சென்னையில் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, இந்த ஆண்டு நாடு முழுதும் அறிமுகம் செய்யப்படவுள்ள 52 புதிய ரயில்களில் தெற்கு ரயில்வே 12 புதிய ரயில்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் எம்.ஆர்.டி.எஸ். ரயில் சேவை மூலம் தெற்கு ரயில்வே மாதம் ஒன்றுக்கு ரூ.9 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகககூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் எம்.ஆர்.டி.எஸ். ரயில் சேவை மூலம் தெற்கு ரயில்வே மாதம் ஒன்றுக்கு ரூ.9 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகககூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நெல்லை-திருச்செந்தூர் மட்டுமின்றி வேலூர்- காட்பாடி, திருவாரூர்- நாகூர், எண்ணூர்- கொருக்குப்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல் ஆகிய ரயில் பாதைகளும் அகலப் பாதைகளாக மாற்றும் பணி முடிந்து விட்டது என்றும்

தலைமை பாதுகாப்பு ஆணையர் இந்த வழித்தடங்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியதும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறினார்.

தென்னக ரயில்வேயில் ஒரே ஒரு தலைமை பாதுகாப்பு ஆணையர் இருப்பதால் ஆய்வுப்பணியை மேற்கொள்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஆய்வுப் பணி முடிக்கப்பட்டு நெல்லை-திருச்செந்தூர் உள்பட அனைத்து வழித் தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும்.

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் ஒரு பயணிகள் ரயில் இயக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும். பட்ஜெட்டில் அறிவித்தபடி எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு வாராந்திர விரைவு ரயிலும் இயக்கப்படும். இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil