Publish Date: Tue, 01 Jul 2008 (13:04 IST)
Updated Date: Tue, 01 Jul 2008 (12:47 IST)
சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் இடதுசாரிகளுக்கும், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள விரிசலுக்கு பிறகு சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த அமர்சிங் பிர்ணாப் முகர்ஜியை நேற்று சந்தித்துள்ளார்.
இருவரும் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்து விவாதித்துள்ளதாக தெரிகிறது.
39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடிக் கட்சி,இடதுசாரிகள் மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டால், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவுக் கரம் நீட்டலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.