Publish Date: Sun, 29 Jun 2008 (17:02 IST)
Updated Date: Sun, 29 Jun 2008 (17:02 IST)
அஸ்ஸாம் மாநிலம் பக்சா மாவட்டத்தின் சந்தைப் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 3 பெண்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமடைந்தனர்.
அதே பகுதியில் இருந்து மற்றொரு குண்டு கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பக்சா மாவட்டம் டாமல்பூரில் உள்ள குமாரிகடா எனும் வாராந்திர சந்தைப் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடத்தில் சுமார் மதியம் 1.10 மணிக்கு இந்த குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையிலும், படுகாயமடைந்தவர்கள் குவஹாத்தியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடித்த பகுதிக்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர விசாரணையிலும், தேடுதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பிற்கு யார் காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. குண்டு வெடித்த பகுதி போடோ தீவிரவாதிகள் அதிகம் நிறைந்த பகுதி என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Sun, 29 Jun 2008 (17:02 IST)
Updated Date: Sun, 29 Jun 2008 (17:02 IST)