Publish Date: Sun, 29 Jun 2008 (13:08 IST)
Updated Date: Sun, 29 Jun 2008 (13:07 IST)
அந்தமான் தீவுகளில் இன்று காலை 6 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!
ரிக்டர் அளவுகோலில் 5.1 என்று பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், பூமத்திய ரேகையிலிருந்து 11.3 டிகிரி வடக்கும், தீர்க்க ரேகை 91.7 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் ஏற்பட்டதாக இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 என்று பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தமானில் தொடர் பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.