Newsworld News National 0806 28 1080628037_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரில் மோதல் தொடர்கிறது!

Advertiesment
காஷ்மீர் அமர்நாத் கோயில் குலாம் நபி ஆசாத்
, சனி, 28 ஜூன் 2008 (14:48 IST)
காஷ்மீர் வனப்பகுதியை அமர்நாத் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 6-வது நாளாக அம்மாநிலத்தில் இன்றும் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் ஆர்‌ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மாநில ஆளுநர் வோரா, முதல்வர் குலாம் நபி ஆசாத் ஆகியோரின் வேண்டுகோள்களைப் பொருட்படுத்தாது, இன்று காலையும் ‌சி‌றிநகர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்‌ப்பாட்டம் நடைபெற்றது.

39.88 ஹெக்டேர்கள் வன நிலப்பகுதி அமர்நாத் கோயில் நிர்வாகத்திடம் கடந்த மாதம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 6 நாட்களாக ஆர்‌ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத் தொலைக்காட்சியில், விவகாரம் சுமுகமாக தீர்க்கப்படும் வரை அமைதி காக்கவேண்டும் என்று எதிர்ப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

ஆனால் ஆர்‌ப்பாட்டக்காரர்கள் இந்த வேண்டுகோளை நிராகரித்து இன்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil