Publish Date: Thu, 26 Jun 2008 (17:36 IST)
Updated Date: Thu, 26 Jun 2008 (17:35 IST)
அணு சக்தி, பணவீக்கம் ஆகிய முக்கிய விவகாரங்கள் பற்றி இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
புது டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் அலுவலக துணை அமைச்சர் பிரித்விராஜ் சவான்,"அணு சக்தி உடன்பாடு பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.
பணவீக்கம் பற்றி விலைவாசி மீதான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் வழக்கம்போல விவாதிக்கப்படும். அமைச்சரவையிலோ அல்லது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவையிலோ விவாதிக்கப்பட மாட்டாது" என்றார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாடு பற்றிக் கேட்டதற்கு, "மத்திய அரசிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்றார்.
அடுத்த மாதம் ஜி-8 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் செல்லவுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணம் குறித்துக் கேட்டதற்கு, அமைச்சரவையில் இந்த விடயமும் விவாதிக்கப்படவில்லை என்றார் சவான்.