Publish Date: Thu, 26 Jun 2008 (16:54 IST)
Updated Date: Thu, 26 Jun 2008 (16:53 IST)
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி குஜராத் மாநிலத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நவ்ஜோத் சிங் சித்து (அமிர்தசரஸ்), வினோத் கன்னா (குர்தாஸ்பூர்), ஸ்ரீபத் ஒய் நாயக் (பானாஜி), அனுராக் தாகூர் (ஹமிர்பூர்), டி.பி.எஸ். ராவத் (பெளரி) ஆகிய 5 பேரும் முதல் பட்டியலில் உள்ள மற்றவர்கள் ஆவர்.
புது டெல்லியில் இன்று பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சியின் மத்தியத் தேர்தல் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எல்.கே.அத்வானி, வெங்கையா நாயுடு, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், ஆனந்த் குமார், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.