இன்று நடப்பதாகவிருந்த, கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பு குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தயாரித்துள்ள பரிந்துரை அறிக்கை சமர்ப்பண நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்று மதியம் மத்திய சமூகநீதி அமைச்சர் மீரா குமாரிடம் சமர்ப்பிக்கப்படுவதாய் இருந்தது. அமைச்சருக்குப் பல்வேறு முக்கிய அலுவல்கள் இருப்பதால், இந்நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கை ஜூலை 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படக்கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து நீக்கப்பட்டுள்ள கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பு ஆண்டிற்கு ரூ.4- 6 லட்சம் என்று இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த உச்சவரம்பு ஆண்டிற்கு ரூ.2.5 லட்சம் என்றிருந்தது குறிப்பிடத்தக்கது.