இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு விடயத்திலான நெருக்கடிகளைத் தீர்க்கும் முயற்சியாக, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் சந்தித்தார்.
புது டெல்லியில் பிரணாப் முகர்ஜியின் இல்லத்தில் இன்று அதிகாலை நடந்த இச்சந்திப்பின் போது, இடதுசாரிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அணுசக்தி உடன்பாடு தொடர்பாக விவாதிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ.- இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டம் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்துள்ளதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.