Publish Date: Sat, 21 Jun 2008 (16:15 IST)
Updated Date: Sat, 21 Jun 2008 (16:15 IST)
கூர்க்கா லேண்ட் என் பெயரில் தனி மாநிலம் கேட்டு கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் சிக்கிமில் தொடர்ந்து ஆறாவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப் பகுதிகள் இன்னமும் தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், பெரிய அளவிலான வன்முறைகள் ஏதுமின்றி அமைதியான சூழ்நிலை நிலவுவதாக வடக்கு வங்காளக் காவல்துறை தலைமை ஆய்வாளர் கே.எல். டம்டா கூறினார்.
அவசர நிலையைக் கையாள்வதற்காக சிலிகுரியில் 600 மத்திய ரிசர்வ் காவலர்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். டார்ஜிலிங் நகரத்தில் வன்முறைகள் ஏதுமில்லாததால் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்படவில்லை.
ராணுவம், காவல்துறை வானகங்கள், அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் வழக்கம் போல இயங்குகின்றன.
Webdunia
Publish Date: Sat, 21 Jun 2008 (16:15 IST)
Updated Date: Sat, 21 Jun 2008 (16:15 IST)