சிக்கிமில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்தும் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு தலைமையில் முத்தரப்புப் பேச்சு நடத்தப்படுமானால், அதில் மேற்குவங்க அரசு பங்கேற்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு தெரிவித்தார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முத்தரப்புப் பேச்சு நடத்த மத்திய அரசு அழைக்குமானால் மேற்குவங்க அரசு இணைந்து கொள்ளும் என்றார்.
கூர்க்கா லேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினரின் கோரிக்க தொடர்பாகப் பேச்சு நடத்த வருமாறு மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா விடுத்த அழைப்பை அவ்வமைப்பினர் நிராகரித்துள்ளது பற்றி வருத்தம் தெரிவித்த ஜோதிபாசு, "கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் பேச்சிற்கு விரும்பாவிடில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்றார்.