Publish Date: Wed, 18 Jun 2008 (14:03 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
இன்று நடப்பதாகவிருந்த இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மீதான ஐ.மு.கூ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய சில தலைவர்கள் வராததால் ரத்து செய்யப்பட்டுள்ள இக்கூட்டம், அடுத்து ஜூன் 25 ஆம் தேதி நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருந்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையுடனான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் உள்பட இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நிறைவேற்றும் அனைத்து முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்து வரும் இடதுசாரிகள் இன்று மாலை கூடி தங்களுக்குள் விவாதிக்க உள்ளனர்.