மத்திய அரசு உதவிபெறும் மாநிலங்களில் இருந்து குஜராத் நீக்கப்பட்டுள்ள நிலையில், முடிந்தால் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மத்திய அரசிற்கு சவால் விட்டுள்ளார்.
சூரத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "ஒட்டுமொத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களையும் நான் வரவேற்கிறேன்... ஒரு நாளைக்கூட வீணாக்க வேண்டாம். என்னை விதிமீறல் குற்றத்தில் இன்றே என்னைக் கைது செய்த துக்கிலிடுங்கள். உங்களால் எப்படி முடியும் என்று நான் பார்க்கிறேன்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி அஃப்சல் குருவையே உங்களால் தூக்கிலிட முடியவில்லை. என்னை எப்படி?" என்றார்.
குஜராத் மாநிலத்திற்கு உதவிகளை நிறுத்திய மத்திய அரசு, இம்மாநிலத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் வரிகளை வேண்டாம் என்று சொல்லுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.