Publish Date: Sun, 15 Jun 2008 (13:32 IST)
Updated Date: Sun, 15 Jun 2008 (13:31 IST)
வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலச்சரிவு காரணமாக இடாநகர் மாநிலத்தின் இதர இடங்களுடன் துண்டிக்கப்பட்டதாகவும், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.