Publish Date: Sun, 15 Jun 2008 (13:08 IST)
Updated Date: Sun, 15 Jun 2008 (13:07 IST)
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை குண்டுவெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவ மையமாக விளங்கும் மௌவ் அருகே உள்ள நீம்கேடா என்ற கிராமத்தில் குண்டுவெடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் சஞ்சய்நாத் என்ற 25 வயது வாலிபர் கொல்லப்பட்டதாகவும், காயம் அடைந்த 3 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவலர்கள் கூறியுள்ளனர்.
மௌவ் ராணுவ மையம் அருகே குண்டு வெடித்திருப்பதால் குப்பைகளை சேகரிப்பவர்கள் அதில் இருந்த பழைய குண்டு எடுத்து வீசியிருக்கலாம் என்றும், அது வெடித்திருக்கலாம் என்றும் காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் இந்த குண்டுவெடிப்பு நிகழ்வு குறித்து மத்தியபிரதேச மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.