தனியார் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை சோதனையிடுவதற்கான கண்காணிப்பு மையம் ஒன்றினை மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அமைத்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பிரசார் பாரதி அலுவலக வளாகத்தில் ரூ.16 கோடி செலவில் கடந்த வாரம் அமைக்கப்பட்ட இம்மையத்தில், ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிக்க முடியும்.
இந்த மையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே துவங்கப்பட்டு விட்டதாகவும், 1995 கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறும் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைக் கண்டறிவதே இதன் முக்கியப் பணி என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.