ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவருக்கும், அரசுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்குகிறது.
குஜ்ஜார் இனப் பெண்கள் 25 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்குகிறது.
குஜ்ஜார் இனத்தை சேர்ந்த 22 உறுப்பினர்கள் கொண்ட குழு அரசுடன் பேச்சு நடத்தும் என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேச்சு வார்த்தை நடைபெற உள்ள இடத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.