Publish Date: Thu, 12 Jun 2008 (19:02 IST)
Updated Date: Thu, 12 Jun 2008 (19:01 IST)
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் உருவாக்குதல் தொடர்பாக கனடா நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக, கனடாவின் சாஸ்காட்செவான் பல்கலைக் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த தேசியக் கல்வி நிறுவனத்திற்கும் இந்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தம் இருநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இடையில் மார்ச் 28 ஆம் தேதி டெல்லியில் கையெழுத்தாகும் என்று மத்திய அரசின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.