11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள நீர்வளத் தகவல் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.234.30 கோடி ஒதுக்கி பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த நிதியைக் கொண்டு நீர் வளங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் அமைப்புகள் மேம்படுத்தப்படும். நீர்வளங்களின் ஆயுட்காலம், அவற்றை எப்படி முறையாகப் பயன்படுத்துவது ஆகியவை பற்றித் திட்டமிடவும் இந்நிதி பயன்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் சோரிக்கப்படும் தகவல்கள் நீர் வளங்கள் பற்றிய ஆராய்ச்சி, நிர்வாகம், மேம்பாடு மற்றும் திட்டமிடல் ஆகியவற்றுடன் தொடர்புடைய முகவாண்மைகள், தனியார்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
சில குறிப்பிட்ட ரகசிய விவரங்களைத் தவிர மற்ற எல்லாத் தகவல்களும், பொது மக்களின் பயன்பாட்டிற்காக இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.