Publish Date: Tue, 10 Jun 2008 (12:09 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:40 IST)
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தன்னைச் சந்தித்த அஸ்ஸாம் மாநிலத் தலைவர்களிடம், சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவற்றைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டி, அவற்றின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் பிரஃபுல்லா குமார் மஹன்டா தலைமையில், அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம், அஸ்ஸாம் கன பரிஷத் அமைப்பின் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்தனர்.