Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ வாயு தாக்கி 6 பேர் பலி!

விஷ வாயு தாக்கி 6 பேர் பலி!
, சனி, 7 ஜூன் 2008 (14:02 IST)
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மோர்பி என்ற ஊருக்கு அருகேயுள்ள செராமிக் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பலியானார்கள்.

கோமெட் செராமிக் தொழிற்சாலையில் பாதாள கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய அதில் இறங்கிய 6 துப்பரவுப் பணியாளர்கள் விஷ வாயு தாக்கி பலியானதாகாவல்துறையினரதெரிவித்துள்ளனர்.

மயக்கமடைந்திருப்பதாக இந்த 6 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனை‌க்கு கொ‌ண்டு சென்ற போது, வ‌ழி‌யிலேயே அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil