Newsworld News National 0806 04 1080604020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் - பா.ஜ.க.!

Advertiesment
பெட்ரோல்
, புதன், 4 ஜூன் 2008 (14:20 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது!

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. பேச்சாளர் பிரகாஷ் ஜவடேகர், பணவீக்கத்தை அதிகரிக்கும் இந்த விலை உயர்வு மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறினார்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கு விலைகளை உயர்த்தும் மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்கள் மீதான இறக்குமதி தீர்வையை முழுமையாக ரத்து செய்யாமல், அரை மனதுடன் 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைத்துள்ளது என்று குற்றம் சாற்றினார்.

Share this Story:

Follow Webdunia tamil